• Breaking News

    கும்மிடிப்பூண்டி அடுத்த முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

     


    திருவள்ளூர் மாவட்டம்.கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல் பேட்டை ஊராட்சி முத்து ரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் அப்பகுதி மக்களால்  புதுப்பிக்கப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

    இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த சனிக்கிழமை பகவத் அனுக்கிரகம், வேத பிரபந்தம் தொடக்கம், யாகசாலை வாஸ்து சாந்தி, அகல் மஷ ஷோமம், மகா சாந்தி ஹோமம், ஆசாரிய அழைப்பு,  சங்கல்பம், புண்ணியாஹ வாசனம் ,மிருத்ஸங்க்ரஹனம், அங்குரார்பனம், அக்னிமதனம், ஆசார பிரயோகம், கலாகர்ஷனம், பஞ்ச சூக்த ஹோமம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, வேத பிரபந்த சாற்று முறை ஆகியவை நடைபெற்றது.

     தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை புண்ணியாகம், அக்னி பிரணயானம், கும்ப ஆராதனம், பஞ்ச சூக்த ஹோமம், மஹா சாந்தி ஹோமம், நித்திய ஹோமம், இரண்டாம் கால யாகசால பூஜை , வேத பிரபந்த சற்று முறை,  அக்னி பிரணயானம், அதிவாசகம், மகா சாந்தி, திருமஞ்சனம், சர்வட்தேவார்ச்சனம், சயனாதி வாஸம்,  ஹௌத்ரம், பிரதான மூர்த்தி ஹோமங்கள் மூன்றாம், காலை யாக பூஜை நடைபெற்றது.தொடர்ந்து கும்பாபிஷேக தினமான திங்கள் அன்று கோ பூஜை, புண்யாகவாசனம், விஸ்வரூபம், அக்னி பிரணாயணம், கும்ப ஆராதனம், உக்த ஹோமம், மகாபூர்ணாஹுதி, யாத்திராதானம், அக்னி சமோரோபனம் நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து முத்து ரெட்டி கண்டிகை கிராம மக்கள் புடை சூழ மேள வாத்தியங்களுடன் கும்ப புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆலய விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.அதன் பின்னர் வேத பிரபந்த சாற்று முறை, சர்வ தரிசனம், தீர்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களைக் கொண்டு வந்தவுடன் புரோகிதர்கள் வேத மந்திரங்களும் முழங்க  திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். 

    கும்பாபிஷேகத்தின் நிறைவாக விசேஷ அலங்காரத்துடன் மங்கள வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

    No comments