தக்காளி விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைவாக இருக்கும். இந்த நிலையில் தக்காளி விலை ஏற்றத்துடன் இருப்பது சகஜமானதாகும்.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகள் எடுத்து தக்காளி விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டும் சில மாதங்களுக்கு தக்காளி விலை ஏற்றத்துடன் காணப்பட்டது.அப்போது தமிழ்நாடு அரசு பசுமை பண்ணைகள் மூலம், நியாய விலை கடைகள் மூலம், கூட்டுறவு சங்கங்களின் மூலமும் தக்காளியின் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று இந்த ஆண்டும் தக்காளிகளின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதனால் தக்காளி விலை கட்டுக்குள் உள்ளது. இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments