தென்காசி: கால்பந்து போட்டியில் மாநில அளவில் 3ம் இடம்..... வெங்கடேஸ்வரபுரம் பள்ளி மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான காலணி தொகுப்பு...... முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்......


முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பெற்ற வெங்கடேஸ்வரபுரம் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான காலணி தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி (எ) வெங்கடேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகி;ன்றனர். இப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்று 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குகன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தார். கால்பந்தாட்ட அணி பயிற்சியாளர் இசக்கி துரை வரவேற்றார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநில அளவில் சாதனை படைத்த 18 மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான காலணி தொகுப்புகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தம்மாள்புரம் முருகன், கீழக்கழங்கல் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமார், முன்னாள் ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்செல்வம். முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி அரவிந்த் ராஜ்திலக், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, திமுக நிர்வாகிகள் அந்தோணி, இளைஞரணி சிவா ,முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், ரெட்டியார்பட்டி பிரின்ஸ் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் மகேந்திரன், செல்வகுமார், ராஜேந்திரன், ராமர், மாரிஸ்வரன், ,லேத்செல்வன், கருப்பசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவிதலைமை ஆசிரியர் அமிர்தவல்லி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments