கடையநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 8987 மனுக்கள் பெறப்பட்டுள்ளன..... நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தகவல்.....


கடையநல்லூர் நகராட்சியில் 12 கட்டங்களாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் மூலம் 8987 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் ; மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 26, 27, 28வது வார்டு பகுதிக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமினை நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளை தீர்த்திடு;ம் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடையநல்லூர் நகராட்சியில் 12 கட்டங்களாக நடைபெற்றது. கடைசி முகாமானது இன்று நடைபெற்றது. இம்முகாம்கள் மூலம்  மொத்தம் 8987 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் நகராட்சி சார்ந்த மனுக்கள் 55 பெறப்பட்டு, அதில்  38 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. என்றார்.

இம்முகாமில் நகராட்சி ஆணையர் லட்சுமி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நகராட்சி உதவி பொறியாளர் அன்னம், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மாரி, அலி, திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், வீரபுத்திரன், சுடலை, சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments