புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கதண்டு கடித்து கூலி தொழிலாளி பலி..... ஒருவருக்கு தீவிர சிகிச்சை......


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டைக்கும் மாங்குடிக்கும் மையப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள கதண்டுகள் அவ் வழியே கட்டிட கூலி வேலைக்குச் சென்ற ரத்தினகோட்டை விஸ்வநாதன் (32) பாலைவனம் ஆறுமுகம் (55) ஆகிய இருவரை கடித்ததில் விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அறந்தாங்கி அருகே பேராவூரணி சாலையில் உள்ள ரத்தினகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரும் இவருடன் பாலய வனம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் மாங்குடி கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்கு புறப்பட்டு குருந்திரகோட்டை வழியாக சென்றபோது குருந்திரகோட்டை கிராமத்திற்கும் மாங்குடி கிராமத்திற்கும் மையப்பகுதியில் பெருமாண்டி என்ற இடத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இருந்து கதண்டுகள் கடித்தது இவர்கள் அலறல் சத்தம் போட்டவுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 கதண்டு கடித்து காயம்பட்ட இருவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் ஆறுமுகம் சிகிச்சை பிரிவில் உள்ளார் இதுகுறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார் கதண்டு பறந்த கடித்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments