கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரேஸில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பிலேவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

0 Comments