சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கிய பிரபலங்களின் வரலாறு தமிழக அரசியலில் ஏராளம் உண்டு. அந்த வரிசையில் நடிகர் விஜயும் விரைவில் இணைய இருக்கிறார். இந்த மாதம் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி பதிவு செய்ய இருக்கிறார் எனவும் வருகிற 2026ம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிடப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. மாணவர்களுக்கு உதவித்தொகை, பாடசாலை, சட்ட ஆலோசனை மையம் என விஜயின் நகர்வுகளும் அரசியலை நோக்கியே உள்ளது.
விரைவில் தான் ஆரம்பிக்க இருக்கும் கட்சிக்கு ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைக்க இருக்கிறாராம் விஜய். இந்த கட்சிக்காக புது செயலி ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தப் போகிறார் என்கின்றனர் அவரது வட்டாரத்தினர்.
இன்னும் ஐந்து நாட்களில் தனது கட்சிப் பெயரில் புதிய செயலி தொடங்கி அதன் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளாராம் விஜய். இந்த தகவல் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ஆனால், கட்சிப் பெயர், செயலி அறிமுகப் படுத்தப் போவது என அடுத்தடுத்து தகவல்கள் கசிந்து வருவது விஜயை டென்ஷனாக்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

0 Comments