தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை, மற்றும் நகராட்சி நீரேற்று நிலையம் ஆகிய பகுதியில் இன்று திமுக பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெரியகுளம் நகராட்சி அதிகாரிகளுக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர் மன்றஉறுப்பினர்கள் மற்றும் பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Comments