ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , சிக்கரசம்பாளையம் ஊராட்சி , குளத்தூர் பிரிவு மற்றும் ஏடிகாலனி ஆகிய பகுதியில் தார் சாலை அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் (வ ஊ), சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ . தேவராஜ் , வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சேகர் , வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி , மாவட்ட பிரதிநிதி ஆறுச்சாமி , ரமேஷ் , ஒன்றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி , இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் , பெரியசாமி பிரபு , வடவள்ளி சௌந்தர் திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments