கும்மிடிப்பூண்டி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையெட்டி வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் ,அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 13, 2025

கும்மிடிப்பூண்டி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையெட்டி வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் ,அன்னதானம் வழங்கப்பட்டது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே எம் எஸ் சிவக்குமார்  ஏற்பாட்டில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈகுவார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற   கோவிலில் வெக்காளியம்மன் சிறப்பு வழிபாடு நடைபெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமை நடைபெற்றது.

 அப்போது எடப்பாடி கே பழனிசாமி  மீண்டும் முதலமைச்சராக வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து 701 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நாதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு மாவஎட்டு இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் அம்மா பேரவை இணை செயலாளர் முல்லைவேந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment