27 வயது கல்லூரி மாணவியுடன் பலமுறை உல்லாசம்...... செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய 55 பேராசிரியர் கைது.....

 


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 27 வயது மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் மீது புகார் கொடுத்திருந்தார். அதாவது இந்த மாணவி கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிஎச்டி படித்தார். அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக ராஜா என்ற 55 வயது நபர் பணிபுரிந்து வந்தார்.

இவர் அந்த 27 வயது மாணவியுடன் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில் அதனை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை காட்டி தற்போது ஆசிரியர் மாணவியை மிரட்டிய நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மாணவி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments