கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கினார் ஒன்றிய பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கினார் ஒன்றிய பொறுப்பாளர் சீ.பொன்செல்வன்


கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை ஒன்றிய பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் வழங்கினார்.


தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலனின் அறிவுறுத்தலின் பேரில்,கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மகிழ்வண்ணநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளரும், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான சீ.பொன்செல்வன் தலைமை வகித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து  கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி மகிழ்வண்ணநாதபுரம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை ஒன்றிய பொறுப்பாளர் பொன்செல்வன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணி ராஜ், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நிர்வாகிகள் தளபதி முருகேசன், கலைச்செல்வன், ஜெகதீசன், பொருள்செல்ன்,வேல்மயில்.மூக்கன், ராஜ், மதன் மோகன், சீனிநம்பியார், சீமான், ராஜசேகர், குமரேசன், பரமசிவன்,: கண்ணன், ராஜசுதன், குறிஞ்சி, மகேஸ், அழகேசன், ஆறுமுகம், கலர் மேட்டூர் ஜெயக்கொடி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment