தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாட்டாகுறிச்சி மாவட்ட விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 1500 மீட்டர் தடகளப் போட்டி நடைபெற்றது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைகுமார் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, தென்காசி நகர்மன்ற தலைவர்.சாதிர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன்,  சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் கௌசல்யாதென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தசேக் அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், பாட்டாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் அன்னலெட்சுமி, துணைத்தலைவர் முருகேசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.