உலக அளவில் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 6-வது இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்ற இந்திய மாணவன், தமிழர்களின் பாராம்பரிய உடையில் பதக்கத்தினை பெற்றது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. ஜப்பானில் கடந்த 19, 22 ஆகிய தேதிக்ளில் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 10- க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் வசிக்கும் விஜய் - ஆர்த்தி தம்பதியின் மூத்த மகன் ஆல்பிரைன் ஆண்டனி ஜோசப் விஜய் சென்னை தனியார் பள்ளியில் பயின்று வரும் நிலையில், ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டார். இந்தியாவில் இருந்து 6 பேர் பங்கேற்ற நிலையில் உலக அளவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இவர் இந்த போட்டியில் 6 வது இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் .
போட்டியில் வென்ற மாணவனின் தாத்தா கருணாகரன், பாட்டி சுந்தரி ஆகிய இருவரும் பாவூர்சத்திரத்திற்கு வரவழைத்து இனிப்புகள் வழங்கி பாராட்டினர். எந்த ஒரு போட்டியிலும் முழு முயற்சி எடுத்தால் வெற்றி உறுதி என்றும், இந்த பதக்கத்தை நமது பாராம்பரிய உடையான் வேஷ்டி சட்டை அணிந்து பெற்றது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


0 Comments