திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இன்று அதிகாலை பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சுமார் 5 மணியளவில் அவர்கள் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (35), விஜயலட்சுமி (40), சசிகலா (47) மற்றும் சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த சித்ரா (40) ஆகிய நான்கு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments