தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு பாவூர்சத்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆலங்குளம் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து பாவூர்சத்திரம் வருகை தந்த அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் செல்வன், மேற்கு வட்டார தலைவர் குமார் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் எம்.பி. சுப்பிரமணியன், கீழப்பாவூர் நகர தலைவர் சிங்கக்குட்டி (எ) குமரேசன், தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்ட மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் பொன் கணேசன், மாதவன், காமராஜ், அமர்நாத், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் செல்லப்பா, சின்ன ராஜா, பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் மனித உரிமைதுறை தலைவர் முருகேசன், மகளிர் அணி சேர்மக்கனி, சீதாதேவி, மங்களம், கிளாங்காடு மணி, மாவட்ட விளையாட்டு பிரிவு ஷியாம் பிரசாத், பேரூராட்சி கவுன்சிலர் கோடீஸ்வரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments