நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் யூனியன் லீக் கட்சிகளின் ஆதரவுடன் 120 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது.தமிழகத்தில் மலர்ந்த புதிய ஆட்சியின் முதலமைச்சராக தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் 9 அமைச்சர்களுடன் பதவி ஏற்றார்.அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் தவெகவினர் 20க்கும் மேற்பட்ட படகுகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் அதன் நிர்வாகிகள் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் செம்பாசிபள்ளி மீனவ கிராமத்தில் இருந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பின் தவெக கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பழவேற்காடு கடல்பகுதியில் உள்ள மீனவ மக்களுடனும், மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடமும் படகில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


0 Comments