தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகில், பெரியகுளம் டிடி 427 பால் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில், ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.28.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.வைத்தியநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் (தனி) சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments