புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி போக்குவரத்து காவல் நிலையத்தில் மூன்று காவலர்கள் பயன்படுத்தி வந்த வாகனம் எரிந்த நிலையில் காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வாகனம் எவ்வாறு எரிந்தது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செய்யதுஅளி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவலர்கள் பயன்படுத்திய வாகனம் எரிந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.