தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவு பகுதியில்  ராமநாதபுரம்  நகர் திமுக செயலாளர் கார்மேகம் தலைமையில்  நகர்செயலாளர் பிரவீன் தங்கம், முன்னாள் இராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ்  உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி கொடி ஏந்தியவாறு தவெக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, பேரணியாக திரண்டு வந்து ஐஓபி சந்திப்பு அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திடீர் சாலை மறியலால் மூன்று புறங்களிலும்  போக்கு வரத்து  பாதிப்பு ஏற்பட்டது. 

 இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில்   ஈடுபட்ட திமுகவினரை ராமநாதபுரம்  டிஎஸ்பி சுகுமாரன்  தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் இணைந்து கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று  பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  அடைத்துள்ளனர்.

திமுகவினரின் திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில்  சந்திப்பு பகுதியில்  சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு  பரபரப்பு நிலவியது.