அமெரிக்க தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி செய்த தில்லாலங்கடி இந்திய ஆடிட்டர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் வருண் அகர்வால் (வயது 41). இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2008 முதல் அங்குள்ள ஒரு பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு வரவு-செலவு கணக்குகளை பார்த்து வந்தார். அப்போது மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் போலி ரசீதுகளை பதிந்து உறவினர்களின் பேரில் சொத்து சேர்த்தது அம்பலமானது. இதனால் கடந்த ஆண்டு அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசர் வழக்குப்பதிந்து வருண் அகர்வாலை கைதுசெய்து கோர்ட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர். வழக்கு விசாரணையின்போது வருண் அகர்வால் ரியல் எஸ்டேட் அதிபரை மோசடி செய்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.22 கோடியே 43 லட்சம்) சுருட்டியது தெரிந்தது. அமெரிக்க புலனாய்வு முகமை இந்த வழக்கு குறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments