கிருஷ்ணகிரி: தினமணி செய்தியாளரின் தில்லாலங்கடி வேலைகள்..... கண்டுகொள்ளுமா நிர்வாகம்..?


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு தினமணி செய்தியாளராக பணியாற்றும் பழனி என்பவர் அதே பகுதியில் செயல்படும் தனியார் கம்பெனியான RD அக்ரோவின் பிஆர்ஓ வாக செயல்பட்டு வருகிறாராம்.முழு நேர பணியாளராக செயல்பட்டு வரும் செய்தியாளர் பழனி ஆர்டி அக்ரோ தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு பத்திரிகை துறையில் எப்படி பணியாற்றுகிறார்..?அது ஒருபுறம் இருக்கட்டும் பத்திரிகை துறையின் சலுகைகள் எப்படி பெற்று வருகிறார்....?

ஆர்டி அக்ரோவை பற்றி தென்னிலை கதிர் இதழில் செய்திகள் வெளியிட்டால் பத்திரிகையாளராக செயல்படும் பழனி என்பவர் தென்னிலை கதிர்  மீது காவல்துறையில் புகார் மனு அளிப்பது தனியார் கம்பெனியின் அடிமையாக மாறிவிட்டாரா இல்லை செய்தியாளர் என்பதை மறந்து விட்டாரா என்று மற்ற நிருபர்களே குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

RD அக்ரோ

இதற்கு ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என செய்தித்துறையில் செயல்பட்டுகொண்டு தான் பணியாற்றும் தனியார் கம்பெனிக்காக  குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர கட்டிங் செலுத்தி வரும் RD அக்ரோ கூறியது போல் புகார் கொடுக்கும் கட்டிங் நிருபர்களை என்னவென்று சொல்வது.

 இவருடன் அணி சேர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளரான உங்களுக்கு மாதாந்திர கட்டிங் வராது எனவே தென்னிலை கதிர் மீது வழக்குப்பதிவு செய்ய அனைவரும் வந்தால் மட்டுமே மாதாந்திர கட்டிங் வரும் என கூறி பத்திரிகையாளரை ஒன்று திரட்டி வழக்கு பதிவு செய்ய காவல்துறையிடம் புகார்மனு அளித்துள்ளார் கட்டிங் மாஸ்டர் தினமணி பழனி, இதனை வரவேற்கிறதா தினமணி பத்திரிகை நிறுவனம்...???

இதில் வேடிக்கை என்னவென்றால் சங்கங்களாக திரட்டிக்கொண்டு தன்னுடன் வரும் செய்தியாளர்களுக்கு மாதாந்திர கட்டிங் இவரே பகிர்ந்து அளிப்பது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களுக்கு புத்தாடையோடு ரொக்கமும் கொடுத்து வரும் நபர் தான் இந்த பழனியாம்.

RD அக்ரோ உரிமையாளர் கோபிநாத்

 ஒரு இதழில் செய்தி வருகிறது என்றால் இதழின் ஆசிரியர்,செய்தியாளர் என செய்தியின் உண்மை தன்மையை அறிந்து அது வெளியிடுவது வழக்கமான ஒன்று, இதில் தவறு ஏதேனும் இருப்பின் அந்நிறுவனம், நிறுவனத்தின் சார்பாக வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடர்வது தான் வழக்கம். ஆனால் தன் பின்னால் இருக்கும் கட்டிங் பெரும் செய்தியாளர்களை ஒன்றித் திரட்டி செய்தி நிறுவனம் மீது காவல்துறையில் புகார் மனு அளிப்பது என்ன காரணம், ஆதாரங்களுடன் பத்திரிக்கை செய்தி வெளியிட்ட இதழின் மீது மிரட்டும் போக்கில் செயல்படும் பழனி மீது தினமணி பத்திரிகை நிறுவனம் என்ன செய்யப் போகிறது...?

தென்னிலை கதிர் செய்தியாளர்கள் மீது ஏதாவது தவறான குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருப்பின் பகிரங்கமான நடவடிக்கை தென்னிலை கதிர் நிறுவனம் சார்பாக எடுக்கப்படும். அதேபோல் செய்தி வெளியிடுவதும் ஆதாரங்கள் இன்றி எப்பொழுதும் தென்னிலை கதிர் செய்தி வெளியிடாது இதனை தெரிவித்துக் கொள்கிறேன். என அதன் ஆசிரயர் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் எங்கள் நிறுவனத்தின் மீதோ பத்திரிக்கையாளர் மீது தவறான குற்றச்சாட்டுகளை இனி கூறி வந்தால் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடரவும் தயங்கமாட்டோம். தவறான கணக்குகளை காட்டி உள்ளாட்சித் துறை அதிகாரிகளை மிரட்டி வரும் பழனி மீது தொடரும் நமது செய்திகள்.இதுமட்டுமா கட்டுமான அலுவலக நபரிடம் கட்டிங் போட்ட கதை எல்லாம் இருக்கு வெயிட் பன்னுங்க எல்லாமே வரும். எனவும் தென்னிலை கதிர் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments