சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்குள் இருக்கும் குழப்பம் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ களால் தெளிவாகிறது, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் பாண்டித்துரை, இவர் கட்சி பதவி ஏற்றதில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக கட்சிப் பணி மேற்கொள்வது போல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் பரவி வந்தது.
இந்த நிலையில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வந்ததாக கட்சியினரிடையே கூறப்பட்டு வருகிறது, இந்த நிலையில் ராஜேஸ்வரி என்பவர் கட்சிப் பணி சரியாக செய்து வருவதாகவும், இவரை திட்டமிட்டு வேண்டுமென்றே கட்சிப் பணி சரிவர செய்யவில்லை என நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ராஜேஸ்வரி என்பவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திதோடு மட்டுமல்லாமல், ராஜேஸ்வரி என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயன்றதாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வரும் நிலையில், கட்சியினருக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி வரும் பாண்டிதுரை, பொதுமக்களுக்கு எவ்வாறு மக்கள் பணியாற்றுவார் என பரவலாக பேசப்படுகிறது, இந்த நிலையில் கட்சியினருக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் இவர் கைது செய்யப்படுவாரா? எதிர்பார்க்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது, இதுகுறித்து காவல்துறை அதிகாரி சிலரிடம் கேட்டபோது, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதற்கான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.
மற்றொரு புரம் சாதாரண பாமரன் மீது வழக்குப் பகுதியில் செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்யும் காவல்துறை, இவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து வருகிறது, பாண்டித்துரை என்பவர் ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரைக்குடி வரும்போது, ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் பத்திரிகையாளரை தரையில் அமர வைத்து வேடிக்கைப் பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments