திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி அதிமுக. வேட்பாளரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமனை ஆதரித்து கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகை கௌதமி ஆரணி பேரூராட்சி பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் கடந்த ஐந்தாண்டுகளில் சிறுமி முதல் முதியவர் வரை பாதுகாப்பில்லாமல் திகழ்ந்த ஒரே மாநிலமான தமிழ்நாடு உள்ளதாகவும் கஞ்சா பழக்கம் அதிகரித்து ஓடி கோடியாய் கொள்ளையடித்து தமிழகத்தை அகல பாதாளத்துக்கு தள்ளி சென்றவர் மு க ஸ்டாலின் என்றும் அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது வீட்டுக்கு செல்ல உள்ளதாகவும் திராவிட மாடல் அரசு குறித்து கடுமையான விமர்சத்தை முன்வைத்த அவர் எடப்பாடி யார் ஆட்சி அமைந்த உடன் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் மேலும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் ஆரணி நகர செயலாளர் தயாளன் ஒன்றிய செயலாளர் சம்பத் ஆரணி பேரூர் கழக துணை செயலாளர்.பேரூராட்சி 12 வது வார்டு சந்தான லட்சுமி குணபூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



0 Comments