திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முழு ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்குவதாக தீர்மானம்


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுநியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 196 சட்டமன்ற தொகுதிகளுக்கு எழுச்சி  பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கழகத்தை வலுப்படுத்தினார் மேலும் 17 வது சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி பயணம் மேற்கொண்டு கழக வேட்பாளருக்கும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்து கழகத்தின் சார்பாக 47 பேரும் கூட்டணி கட்சி சார்பாக ஆறு பேரும் வெற்றி பெற்றனர் அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு  இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மக்களுக்காக செயல்படும் கழக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட எங்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பும் உறுதியுடன் தெரிவிக்கிறோம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில் ஒன்றிய கழக செயலாளர்கள்  பூண்டி பிரசாத் , சோழவரம் சம்பத், மீஞ்சூர் முத்துக்குமார், இ ஆர் தமிழ்ச்செல்வன் ,ஜி எஸ் வினோத், கும்மிடிப்பூண்டி எஸ் எம் ஸ்ரீதர், டிசி மகேந்திரன், கே எம் எஸ் சிவக்குமார் , ஜே ரமேஷ் குமார், எல்லாபுரம் ஈ கே கே கோதண்டம், வேதகிரி, நகர செயலாளர் செல்வகுமார் ,மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன், கும்மிடிப்பூண்டி எஸ்டிடி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments