கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும்...... சிறுவாபுரியில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு பேட்டி


தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். விநாயகர், மூலவர், உற்சவர், ஆதிமூலவர், நவகிரக சன்னதிகளில் வழிபாடு செய்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.


 தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, விசாக நட்சத்திரத்தில் சிறுவாபுரி முருகனை தரிசித்துள்ளதாகவும், அல்லவைகளை புறந்தள்ளி நல்லவைகளை கொடுப்பவர்  முருகர் எனவும் மனதார பிராத்தித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கட்டங்களை உடைத்து எறிந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும், கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்குப் பின் எரிவாயு விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு வாடிக்கையாக செய்யும் செயல் எனவும், தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் எனவும் அதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்றார். எரிவாயு விலை உயர்வு தொடர்பாக தமிழிசை அளித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து அமைச்சர் சேகர்பாபு புறப்பட்டுச் சென்றார்.

Post a Comment

0 Comments