திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது அம்மோனியா கேஸ் கசிவு இந்நிறுவனத்தில் ஏற்பட்டது.
இதில்,இந்த கேஸை சுவாசித்த சுமார் 70 பேர் மயக்கம் அடைந்தனர்.உடனடியாக அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.இதில், ஆறு பேரின் உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா,காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷ சாயி,திருவள்ளூர் மாவட்ட எஸ் பி சாய்பிரனீத், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ரவி,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.




0 Comments