தோழிகளை ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் கைது



 நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவை சேர்ந்த மகர ஜோதி (வயது 39) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தங்கினார். சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அங்குள்ள மற்ற அறைகளில் வசித்து வரும் பெண் தோழிகளை செல்போனில் படம் பிடிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

உடனே. மகரஜோதியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் கண்ணன் என்பவருக்கு விடுதியில் தங்கி உள்ள பெண்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த விடுதியின் காப்பாளர், கடந்த சில நாட்களுக்கு முன் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி, 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

விசாரணையில் அவர் காதலனை குஷிப்படுத்த இவ்வாறு செய்ததாக பரபரப்பு வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். மேலும் பல்வேறு விதமான கோணங்களில் எடுத்து அனுப்புமாறு அவரது காதலன் கூறியுள்ளதாக ஜோதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மகரஜோதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கண்ணன் என்பவர் அவரின் காதலன் என்பதும், அவர் கோவையில் வசித்து வருவதும் தெரியவந்தது. கண்ணனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கோவைக்கு விரைந்து உள்ளனர். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments