திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் என சுமார் 800 பேர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை தனியார் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இயக்கத்தின் நிர்வாகி நரேஷ் குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு முதல் பரிசு 10.000 ரூபாய் இரண்டாம் பரிசு 7.000. ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ. 5000 ரூபாய் வெற்றி கேடயம் ரொக்க பணம் வழங்கினார்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் செய்து இருந்தனர்.




0 Comments