கோளூர் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது



 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர்   கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புறனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது.



 அதனைத் தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி கோ பூஜை, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக  பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து இறுதி நாளான இன்று மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.



 அப்போது கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கத்தின் சாமி தரிசனம் செய்தனர்  பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு   கோளூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments