நாகை: மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புதிய தொண்டர்கள்

 


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரத்தாங்குடி ஊராட்சி நாகலூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.கே.விக்னேஷ் தலைமையில் வலிவலம் ஊராட்சி காருக்குடி கிராமத்திலிருந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தவெகவில் இணைந்து கொண்டனர். 



இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி இணை அமைப்பாளர் பி.நாகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் கே.ஜே.ஜெயசீலன் வலிவலம் ஊராட்சி செயலாளர் மனோஜ் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி பற்றி பேசப்பட்டது .



மேலும் கூரத்தாங்குடி ஊராட்சியில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டிற்கு போகும் சாலை சீரமைக்காமல் இருந்த சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் கழகத் தோழர்கள் மூலமாக கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது இதனை ஆராய்ந்து உடனே அந்த பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments