கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். தொழிற்நுட்ப கல்லூரியில் 17-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான வரவேற்பு விழா கல்வி குழும நிறுவனர் டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வான டி.ஜெ.கோவிந்தராஜன், இயக்குனர்கள் தினேஷ், தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, தொழிற்நுட்ப கல்லூரியின் முதல்வர் பிரேம் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக வாய்ஸ் பவுண்டேஷன் இயக்குனர் முனைவர் ஆறுமுகம் குருசாமி பங்கேற்றார். நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.




0 Comments