கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு பள்ளியில் 1986-87ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் குடும்பத்துடன் சந்திப்பு



கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986-1987ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மணவிகள் கும்மிடிப்பூண்டி யில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 5-வது ஆண்டாக நடைபெறும் இந்த சந்திப்பின்போது, தாங்கள் படித்தபோது அரசு பள்ளியில் நிகழ்ந்த பழைய நினைவு களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து பேசி மகிழ்ந்தனர். 



மேலும், தாங்கள் படித்த அரசு பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையினை வழங்கினர்.பின்னர் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டு அறுசுவை உணவை குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டனர்.முன்னதாக பெரியபாளையத்தில் தனியார் இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 18 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்புக்குழ செய்து இருந்தனர்.



Post a Comment

0 Comments