ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி, கோ கோ உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் க்ஷத்திரிய நாடார் உறவின்முறை முறைகாரர் ஆறுமுகம் , பள்ளி நிர்வாக குழு தலைவர் வெங்டேஷ்பாபு, செயலாளர் ராஜேஷ்கண்ணா, பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் பிரேம்குமார், வன்னியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி முதல்வர் அருணாதேவி வரவேற்று பேசினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். மேலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


0 Comments