மேல்முதலம்பேடு அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு



திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பூஜைகள்,ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. 



நேற்று காலை மகா பூர்ணாகுதி,யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர்,மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் தாசரி பட்டாச்சாரியார் தலைமையில் பிரகார புறப்பாடு நடைபெற்றது.காலை 10:30 மணிக்கு கோபுர கலசம், மூலவர்,பிரகார மூர்த்திகள்  உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.



 இதில்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர், பக்தர்களுக்கு திருக்கோவில் வளாகத்தில் அறுசுவையுடன் கூடிய மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ரமேஷ்,துணைத் தலைவர் பாஸ்கர்,செயலாளர் தயாளன்,துணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர்களும்,பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments