திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் ஊராட்சி வல்லம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தின் 20ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயில்களில் வருடம் தோறும் பொதுமக்கள் ஒன்றிணைந்து விசேஷ நாட்களில் சுமங்கலிகள் தீபம் ஏற்றி வழிபடுவதும்வழக்கம்.அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.இதைத்தொடர்ந்து 20 ஆம் ஆண்டு திமிதி திருவிழா காப்பு கட்டிய பக்தர்கள் தினந்தோறும் காலை மாலை என வழிபாடு செய்து வந்தனர். அதன் பின்பு நேற்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஒவ்வொருவராக தீயில் இறங்கி நேற்றி கடனை செலுத்தினர் அப்போது அனைத்து மக்களுக்கும் கரி , அன்னதானமும் வழங்கப்பட்டது.
அன்று இரவு ஸ்ரீ படவேட்டம்மனுக்கு வானவேடிக்கையுடன் திருவதி உலா வந்த போது ஒவ்வொரு குடும்பத்தினரும் தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.



0 Comments