பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் பலராமனை ஆதரித்து கழக கொள்கை பரப்பு துணை செயலாளர காளியம்மாள் சூறாவளி பிரச்சாரம்


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமனை ஆதரித்து கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் காளியம்மாள் பொன்னேரி பஜார், திருப்பாலைவனம், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



 அப்போது பேசிய அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செய்யாத பணிகள் குறித்தும் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் செய்த பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என நடைபெற்று வருவதாகவும் இந்த திமுக அரசின் மீது கடுமையான விமர்சனத்தில் முன்வைத்த அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் வினோத் குமார் தர்மபிரகாஷ், சுமித்ரா குமார்  பொன்னேரி நகர் துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments