கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய் மகள் உயிரிழப்பு..... 3 வயதுக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.....


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தாய் ராஜகுமாரி 55, மகள் ஜெயபிரசாந்தி 25, ஆகிய இருவரும் மூன்று வயது குழந்தை ராகவர்ஸ்ஷினியுடன் இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேர்க்காடு பகுதியில் சாலை ஓரத்தில் கிராவல் மண் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள் இருவரது வாகனம் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வயது பெண் குழந்தை ராகவர்ஷினி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments