திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் யார்? யார்? ஆவலுடன் காத்திருக்கும் நிர்வாகிகள்,தொண்டர்கள்



தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நேர்காணல் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.


நேற்று 5-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை . மாலையில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம் வடக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது.



தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். 



நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், பொன்னேரியில். காங்கிரஸ் எம்பி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து வருவதால் திமுக வாய்ப்பு தர வேண்டும்  என்றும் கழக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர் இதில் பொன்னேரி சட்டமன்ற வேட்பாளராக வேட்பு மனு தகவல் செய்த நிர்வாகிகள். மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் உள்ளிட்ட 55 மேற்பட்ட தீர்மான நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்.டி.ஜெ.கோவிந்தராஜன். சி எச் சேகர் கே வி வேணுஆனந்த். 35 மேற்பட்டோர்.திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று காலை 9 மணி திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, நேர்காணலும் நடைபெறுகிறது இது தொடர்ந்து விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சி நிர்வாகிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments