தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் ஜ.ஏ.எஸ். இவர், பல கஷ்டங்கள் . குடும்பத்தின் நிதி நெருக்கடி போன்ற தடைகளை தாண்டி, தனது விடாமுயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நான்கு முறை முயற்சி செய்து, தனது நான்காவது முயற்சியில் AIR 101 பெற்று சாதனை படைத்தார்.
சிவகுரு பிரபாகரன் தனது கிராமத்திற்கு பல உதவிகளை செய்துள்ளார். அவர் தமிழ்நாட்டில் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் அவரது குடும்பம் கஷ்டப்பட்டது . அவரது தாயும் , சகோதரியும் குடும்பத்திற்காக கடினமாக உழைத்தனர். அதனால் சிவகுருவும் தனது குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சிவகுரு பிரபாகரன் ஒரு மர ஆலையில் இயக்குநராக வேலை செய்தார். இதன் மூலம் குடும்பத்திற்கு பணம் சம்பாதித்து கொடுத்தார். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவை அவர் விடவில்லை. சகோதரிக்கு திருமணம் முடிந்த பிறகு, தனது கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.
வேலூரில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தார். தனது சகோதரனின் கல்விக்கும் உதவி செய்தார் . பிறகு , சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் படித்தார். அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார்.
3 முறை முயற்சி செய்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் முயற்சியை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து நான்காவது முயற்சியிலேயே AIR 101 உடன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2018-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். தமிழக மக்களை திரும்பி பார்க்க வைக்கும் சம்பவமாக இது அமைந்தத கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ஏற்று கொண்டார். அதற்கு முன்பாக சென்னை மாநகராட்சியில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி வந்தார். அங்கு பாதாளச்சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு மக்களின் பாராட்டை பெற்றவர்.
இவர் நெல்லை மாவட்டத்தின் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் செய்த பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுமட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளாக சிவில் இன்ஜினியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளார் பின்தங்கியமாவட்டமான ராமநாதபுரத்துக்கு அரியபணிகளை ஆற்றுவர் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 Comments