கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சுதாகர் புதுவாயில்,பெருவாயில்,கவரப்பேட்டை பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு


தமிழகத்தில் வருகின்ற 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக,திமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சுதாகர் போட்டியிடுகிறார்.



இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன் முன்னிலையில் கவரப்பேட்டை புதுவாயில் பெருவாயில் மேல் முதலம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், வரவேற்பு அளித்தனர்.



 இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்கள் கூடிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர் இதில் கும்மிடிப்பூண்டி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் இளவரசன் பெருவாயில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் ஜே.ஜே பில்டர்ஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments