திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை,புதிய வீடு கட்டவும்,ரியல் எஸ்டேட்,அரசியல், மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள வேப்ப மரத்தில் ஊஞ்சல் தொட்டி கட்டி,உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் இந்நிலையில்கடந்த 58 நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில் கோயில் செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் ஆய்வாளர் முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.90 லட்சத்து 58ஆயிரத்து 915 ரூபாயும்,தங்கம் 32.51 கிராமும், வெள்ளி 3 கிலோ 509 கிராமும்,வெளிநாட்டு கரன்சி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.



0 Comments