என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் எல்லா திட்டங்களும் தடையில்லாமல் கிடைக்க பாடுபடுவேன்...... கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜ் பேச்சு......



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.ஜெ கோவிந்தராஜன் ஆதரித்து பெத்திக்  குப்பம் தேர்வழி  ரெட்டம்பேடு ஆத்துப்பாக்கம்   ஆகிய பகுதிகளில்   திறந்தவெளி வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்பொழுது பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் டி ஜே கோவிந்தராஜன் கிராமங்களில் அனைத்து பணிகளும் செய்துள்ளேன் என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் அரசு அமைந்த உடன் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் எல்லாம் திட்டங்களும் தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று பொதுமக்களுடன் வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரித்தார் மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் துவக்கி வைத்தார்.



இதில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. பரிமளம்  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமாஜெயம்  கும்மிடிப்பூண்டி தொகுதி  தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் ரே.மா கணபதி செந்தில் முருகேசன் முரளி.கோபி சரத் லோகேஷ் தினேஷ். விமல் ஆதிசேஷன் ஹேமகுமார் சிவா ஹரி ராகுல்.கிருஷ்ணன்  திருமலை.சிவகுமார் சசி திலீப்குமார் ஆனந்தன்  குருவி அகரம் திமுக கிளை சகாதேவன் மெய்யழகன்   மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments