ஆரணி ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா....... மாணவர்கள் அசத்தல்



திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின்  38-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் P.C. சூரிய பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியை லதா முன்னிலை வகித்தார். ஆசிரியை P. அம்மு வரவேற்புரை ஆற்றினார்.



 சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மத்திய தணிக்கைத் துறை முதன்மை இயக்குநர் (Principal Director of Audit) P. ஆறுமுகம், "கடந்த 38 ஆண்டுகளாக இப்பள்ளி ஆற்றிவரும் கல்விச் சேவை போற்றத்தக்கது" எனப் பாராட்டிப் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் மாறுவேடப் போட்டிகளில் பங்கேற்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் S. மகாவீர், K.N. சீனிவாசன், G.B. வெங்கடேசன்  C.ஜெயபாலன் V. M.குமரவேலு  N.பொன்னரசி ஆகியோர் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர் மேலும் ஆரணி மகாவீர் தங்க மாளிகை அதிபர் S. மகாவீர் இப்பள்ளியில் அனைத்து போட்டிகளிலும் முதல் இடம் பிடித்த மாணவிக்கு 2 கிராம் தங்க நாணயமும் இரண்டாம் இடம் பிடித்த மாணவனுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மற்றும்  முக்கியப் பிரமுகர்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.முடிவில் ஆசிரியர் பி என் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.




Post a Comment

0 Comments