திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ்டிடி ரவி ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை யெட்டி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அம்மா அவர்களின் திருவுருவப்படம் அமைக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் துப்புரவு பணியாளர்கள் உட்பட 500 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு பகுதியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் 500 பெண்களுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் நாகசுந்தரம், முன்னாள் தலைவர்கள் அஸ்வினி சுகுமாரன், சீனிவாசன், அம்மா இணை செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம் மனோஜ் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி முன்னாள் நகர செயலாளர் மு க சேகர் ஓடை ராஜேந்திரன் பாசறை சரவணன் மோகன். மஜித் பாய். எம் எஸ் எஸ் வேலு.வார்டு கழக செயலாளர்கள் மகளிர் அணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




0 Comments