திருவள்ளூர்: சாட்டாங்குப்பம் கருங்காலி கிராமம் அருள்மிகு சிவகாமி சுந்தரி சமேத அருள்மிகு சிந்தாமணீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம்.தாங்கல்பெரும்புலம் ஊராட்சி சாட்டாங்குப்பம் கருங்காலி கிராமம்   அருள்மிகு சிவகாமி சுந்தரி சமேத அருள்மிகு சிந்தாமணீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானது பழவேற்காடு அருகே வங்கக்கடல் அருகே அமைந்துள்ள திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின்பு   புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது அதனைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி கணபதி ஓமம்த்துடன் தொடங்கி முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

 அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத சுப்ரமணியர், ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிந்தாமணிஸ்வர்ர் மற்றும் அனைத்து பரிவார தேவதைகளுக்கும் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது குடியிருந்த பக்தர்கள் ஓம் சிவாய நமசிவாய என முழுக்கமிட்டு ஈசனின் அருளை பெற்றனர் பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் அறங்காவல் குழு தலைவர் ரமேஷ், நித்தியானந்தம், பத்மாவதி, இ.ஓ முத்துகுமார்,இணை ஆணையர் அனிதா ,சாட்டான்குப்பம் கிராம நிர்வாகிகள் சின்னதுரை, குப்புசாமி, பாபு மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் மகன் முக தமிழரசன்  குடும்பத்தினர் , திரைப்பட நடிகர் அருள்நிதி, சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன், மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், முன்னாள் கவுன்சிலர் சுமித்ரா குமார், மீஞ்சூர் ரோசையா, பழவேற்காடு மீனவர் பகுதியை சுற்றியுள்ள 60 கிராம மீனவ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 அதனைத் தொடர்ந்து அன்னதான ஏற்பாட்டை அத்திப்பட்டு எம் டி ஜி கதிர்வேல். வடிவேல் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் . இதேபோல் காட்டுப்பள்ளி குமார் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினார். இதில் பழவேற்காடு மீஞ்சூர் அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் சாட்டான்குப்பம் கிராமத்தினர் வருகை தந்த கிராம நிர்வாகிகளுக்கு.மரியாதை செய்தனர்.

Post a Comment

0 Comments