• Breaking News

    துபாயில் கூத்தாநல்லூர் குடும்பங்கள் நடத்திய அமீரகத்தின் 52வது தேசிய தின கொண்டாட்டம்


    துபாய்,ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 52வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும்  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (கே ஈ ஓ) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் வருடா வருடம் நடைபெறுகின்ற ஒன்றுக்கூடி  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். 


    இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள்,  திறன்களை ஊக்குவிக்கும் விதமான கேள்வி பதில்கள் ஏராளமான கூத்தாநல்லூர் குடும்பத்தைச் சேர்த்த குடும்பங்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.. உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள். 


    இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் கமல் கேவிஎல் , தினகுரல் தேசிய தமிழ்  நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, கலனி மொஹைதீன், தாஹிர். எல்லாதமிழ் ராப் அவர்கள், உள்ளிட்டோர்   கலந்துகொண்டனர். 

    இவ்விழாவில் தலைவர் நூருல் ஹக்  செயலாளர் நாசர் பொருளாளர் ஷேக் இப்ராஹிம் கௌரவ ஆலோசகர்கள் ரபீக், தாஹிர் அலி மற்றும்  அமீர் அம்சா, ஜமால் உள்ளிட்ட  ஊர் உறவுகள் கலந்து கொண்டனர்.. வந்திருந்த அனைவருக்கும் தேநீர் மதிய உணவு வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது வந்திருந்த அனைவருக்கும் கூத்தாநல்லூர் சேர்ந்த ஜமாத்தார்கள் நன்றி உரை ஆற்றினர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments