நாகை அருகே வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, April 4, 2025

நாகை அருகே வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது








நாகப்பட்டினம் மாவட்டம் வடவூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டுவிழா, பரிசனிப்பு விழா, பணிநிறைவு விழா என (முப்பெரும் விழா) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதே போன்று நடனமாடிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் வண்ணமிகு ஆடைகள் உடுத்தி நடனமாடி அசத்தினர். பரதநாட்டியம், உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை பரவசமாக்கியது.. அரசு பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்களின் அசத்தலான நடனங்களை பொது மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

விழாவிற்கு வட்டாரக்கல்கி அலுவலர் இளங்கோவன் தலைமை ஏற்க எஸ்.எம்.சி  தலைவி கலைராணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் (திமுக) க. ராசேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டணி தொகுப்பாளர் தனுசுமணி மு.இராஜ்குமார் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் மு. விஸ்வநாதன் ரூபாய் 10,000 கொடுத்து புரவலர் நிதியாக வழங்கப்பட்டது என எடுத்துரைத்தார். 



வருகை தந்தோர் அணைவரையும் பள்ளி தலைமையாசியர் செ.அந்தோணியம்மாள் வரவேற்று பேசினார். எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இவ்வாண்டு பணிநிறைவு பெற்ற  சத்துணவு அமைப்பாளர் க.சுசீலா ஏற்புரை வழங்கினார்.வடவூர் ப, பழனிவேல் நினைவு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment