கீழக்கரை பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு



தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பெயரில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஸ்ரோத் கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கீழக்கரை  உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அணிவகுப்பில் 200  மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

​தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகளில் சென்று கடற்கரை சாலையில்  அணிவகுப்பு நிறைவுற்றது 

தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் காவல்துறை முழு வீச்சில் தயாராக இருப்பதை இந்த அணிவகுப்பு பறைசாற்றியது.

​இந்த அதிரடி பாதுகாப்பு நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த பாதுகாப்பு நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments