திருவாடானை: அரசு பேருந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் இயக்கியதால் பயணிகள் அலறல்

            


 ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிரைவர் இல்லாத நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏறி வண்டியை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் கீழே இறங்கி ஓடினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று அந்த நபரை கட்டுப்படுத்தி பேருந்தை ஆப்செய்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மேற்படிநபரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பேருந்து நிலையத்திலேயே பேருந்து  நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

போலீசார் விசாரணையில், அவர் நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதான விஸ்வநாதன் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. பின்னர் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பஸ் ஸ்டாண்டிற்குள் சிறிது நேரம் அனைத்து பயணிகளும் அச்சத்துடனேயே இருந்தனர்.

Post a Comment

0 Comments